சென்னையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம் பகுதிகளில் மழை அதிகமாக பெய்கின்றது. கிண்டி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்கின்றது.
அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று காலை சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின்படி, “அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” என்று தெரியவருகிறது.
தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 36மணி நேரத்தில் வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.