தமிழ்நாடு

'ஒருங்கிணைப்பு இல்லாததால் 2015ல் வெள்ள பாதிப்பு'- தணிக்கைத்துறை அறிக்கை

'ஒருங்கிணைப்பு இல்லாததால் 2015ல் வெள்ள பாதிப்பு'- தணிக்கைத்துறை அறிக்கை

webteam

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை தலைவர் அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது. 

2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு அரசு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் என  தெவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய வெள்ளத்துக்கு காரணமான பிரச்னைகளை சரிசெய்ய அரசு முழு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் பேரிடர் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஏரிகள், நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை உயர்த்துவது, நீர்வழிந்தோடுவதை மட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றை சரியாக கையாளாததே காரணம் என கூறப்பட்டுள்ளது. அரசு துறைகள் மற்றும் முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததும், ஆக்கிரமிப்புகளாலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்தேக்கம், நீர்வரத்து பற்றிய அறிவியல் பூர்வமான முன்னறிவிப்பு அமைப்பும், வெள்ளம் பற்றிய முன்னறிவிப்பு அமைப்பும் இல்லை என்றும் பேரிடர் மேலாண்மைக்கு என ஒரு நிறுவன கட்டமைப்பை நிதி தன்னாட்சியுடன் அரசு உருவாக்க வேண்டும் எனவும் தணிக்கைத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 289 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் லட்சகணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. 2015ஆம் ஆண்டில் வெள்ளத்துக்கு காரணமான பிரச்னைகளை சரிசெய்ய அரசு முழு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் பேரிடர் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.