தமிழ்நாடு

சென்னை: திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி - படகு மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை: திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி - படகு மூலம் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

kaleelrahman

கொளத்தூரில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை கொளத்தூர் ஜவஹர் நகர் பகுதியில் மழைநீர் இன்னும் வடியாததால் 5 வது நாளாக இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. மழைநீர் 5 அடிக்கு மேல் தேங்கி இருப்பதால் அவசர தேவைக்கு படகு மூலமாக தான் செல்ல வேண்டி இருக்கிறது. இங்கு தீயணைப்புத் துறை இணை இயக்குனர் மீனாட்சி தலைமையில் மீட்பு குழு செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் ராணி லஷ்மி (80) என்ற மூதாட்டிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை படகு மூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர், ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.