சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 2ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்
சென்னை யானை கவுனி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அங்குள்ள மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளையும் எதிர்க்கட்சித் தலைவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து பிற பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். முன்னதாக நேற்று கோடம்பாக்கம் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.