ed raid file
தமிழ்நாடு

தொழிலதிபர், பைனான்ஸியர் வீடுகள்.. சென்னையில் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை வடபழனியில் அடகு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் வீரேந்திர மால் ஜெயின் என்பவரது வீடு மற்றும் கடையில் இன்று மதியம் ஒரு மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ed

இதேபோல அசோக் நகரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஐயப்பன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வேப்பேரியில் பைனான்சியர் மோகன் குமார் என்பவருடைய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் நான்கு இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சோதனைக்குப் பிறகே இது குறித்த தகவல்கள் தெரியவரும்.