திமுக மகளிர் மாநாடு
திமுக மகளிர் மாநாடு PT
தமிழ்நாடு

சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாடு 33% மகளிர் இட ஒதுக்கீடு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட வாய்ப்பு

webteam

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைசிறந்த பெண் ஆளுமைகள் பங்கேற்றுள்ளனர்.

cm stalin

மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நனவாகவும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒரு தளமாக இம்மாநாடு அமையும் என திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ள நிலையில் திமுக எம்பி கனிமொழி முன்னிலை வகித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பீகார் அமைச்சர் லெஷி சிங், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்னும் சற்று நேரத்தில் பங்கேற்கவுள்ளார்.

Kanimozhi MP

சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சுபாஷினி அலி, திரிணமூல் காங்கிரசின் சுஷ்மிதாதேவ், ஆம் ஆத்மி கட்சியின் ராக்கி பிட்லன் உள்ளிட்டோரும் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.