சென்னையில் போகி பண்டிகையையொட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நெகிழி, டயர்களை எரிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி எரித்தால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி நெகிழிப் பொருட்கள் எரிக்கப்படுகிறதா என அனைத்து மண்டலங்களிலும் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.