தமிழ்நாடு

வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை... சென்னை மாநகராட்சி திட்டம்

Rasus

சென்னையில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் 12ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.

சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இந்தப் பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.