தமிழ்நாடு

"விமானத்தில் வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்"-சென்னை மாநகராட்சி !

"விமானத்தில் வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்"-சென்னை மாநகராட்சி !

jagadeesh

டெல்லியில் இருந்து இண்டிகோ, ஏர் ஏசியா விமானங்கள் மூலம் கடந்த மாதம் 24-ஆம் தேதி இரவு சென்னை வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மார்ச் 24ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த 6E-2403 இண்டிகோ விமானம், ஐ 5-765 ஏர் ஏசியா விமானம் ஆகியவற்றில் பயணம் செய்தவர்கள் 28 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்றும், மருத்துவ உதவி தேவைப்பட்டால் 044-2538 4520, 044-4612 2300 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட 11 வடக்கு மாவட்டங்களில் மொத்தம் 180 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் 37 சதவீதம் பேர் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக 18 சதவீதம் பேர் சென்னையை சேர்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,