தமிழ்நாடு

"தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை" - மாநகராட்சி ஆணையர்

webteam

தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் உட்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் வியாபாரம் முடிந்த பின் கோயம்பேடு சந்தையில் தூய்மைப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.