சென்னை மாநகர ஆணையர் ராதகிருஷ்ணர்
சென்னை மாநகர ஆணையர் ராதகிருஷ்ணர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மாடு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனின் அறிவுறுத்தல்

PT WEB

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஒருங்கிணைந்த சுகாதாரம், கால்நடை உற்பத்தி குறித்த தேசிய கருத்தரங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அதில் பேசிய அவர், “கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் அரசு வேலையை மட்டும் குறிக்கோளாக வைத்து செயல்படாமல் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்” என அறிவுறுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் கழிவுகளை உண்ணும் வாய்ப்புள்ளதால் அதன் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அப்படி கொடுக்காதீர்கள். மேலும் தெருநாய்கள் பிடிக்கும் என்றால் அவற்றை தத்தெடுத்து கொள்ளுங்கள், உணவை வீசி செல்ல வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.