தமிழ்நாடு

சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு !

சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு !

jagadeesh

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் "தமிழகத்தில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதுவே தமிழகத்தில் அதிகபட்சம்" என தெரிவித்தார்.