தமிழ்நாடு

காவலர்களுடன் தீபாவளி கொண்டாடினார் சென்னை ஆணையர்

காவலர்களுடன் தீபாவளி கொண்டாடினார் சென்னை ஆணையர்

Rasus

சென்னையில் காவலர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஆணையர், குற்றச் செயல்கள் ஏதும் நிகழாமல் தீபாவளி பண்டிகை தொடங்கி இருப்பதாக தெரிவித்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பனகல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட காவலர்களுடன் தீபாவளி பண்டிகையை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கொண்டாடினார். தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு, தியாகராயநகர் சரக துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது சக காவலர்களுக்கும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய ஆணையர், அனைவருக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் பேசிய அவர், “தீபாவளியையொட்டி எந்தவித பிரச்னைகளும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குற்றச் செயல்கள் ஏதும் நிகழாமல் தீபாவளி பண்டிகை தொடங்கியுள்ளது” என்றார்.