சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர், ரவுடி பினு ஸ்டைலில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் கமல் (26). இவர், ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் பயின்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அவர், நடுரோட்டில் பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டினார். பண மாலை, மலர்க்கிரீடம் என அமர்க்களப்படுத்தினார்.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தை செல்போனில் படம் பிடித்த அவரது நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.