பேசி கவனத்தை திசை திருப்பி சென்னையில் இருவேறு இடங்களில் 8 சவரன் நகைகளை பறித்துச் சென்ற நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையை சேர்ந்த ஜானகி என்பவர், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். ஜானகி பணியிலிருந்தபோது வந்த நபர், பழைய நகைகளுக்கு பதிலாக புதிய நகைகளை தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரிடமிருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனை பறித்துச்சென்றார். அதேநபர், பாண்டிபஜார் உஸ்மான் ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த பன்னீர் செல்வம் என்பவரிடம், அருகில் கலவரம் நடப்பதாக கூறியுள்ளார். பின் அவர் கழுத்திலிருந்த 2 சவரன் நகையை காகிதத்தில் மடித்து எடுத்துச்செல்லுமாறு கூறி ஏமாற்றி நகையை பறித்துச்சென்றுள்ளார். தேனாம்பேட்டை மற்றும் பாண்டிபஜார் காவல்துறையினர் அந்த நபரை தேடி வருகின்றனர்.