தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம்

சென்ட்ரல் ரயில் நிலையம் எம்.ஜி.ஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம்

webteam

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்து பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் கிளாம்பாக்கத்தில் அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் பங்கேற்றன. அப்போது கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் திரையுலகில் மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றவர் எம்.ஜி.ஆர். இலங்கை சென்றிருந்தபோது எம்.ஜி.ஆர் பிறந்த இடத்தை பார்வையிட்டேன் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டது. இதனைதொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.