படகு போக்குவரத்து கோப்புபடம்
தமிழ்நாடு

சென்னை | பக்கிம்காம் கால்வாயில் படகு போக்குவரத்து.. டெண்டர் அறிவிப்பு!!

சென்னையில் பக்கிங்காம் கால்வாயில் படகுப் போக்குவரத்து (வாட்டர் மெட்ரோ) தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் அறிவித்துள்ளது.

Premkumar S

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பக்கிம்காம் கால்வாய் சென்னையின் முக்கிய அடையாளங்களுல் ஒன்றாக இருந்து வருகிறது. பக்கிங்காம் கால்வாயின் மொத்த நீளம் 467 கிலோ மீட்டராகும். இதில் 210 கிலோமீட்டர் தமிழ்நாட்டிலும், 257 கிலோ மீட்டர் ஆந்திராவிலும் அமைந்துள்ளது. இந்தகால்வாயானது ஆரணியாறு, கொரட்டாலியூர் ஆறு, ஓட்டேரி ஆறு, கூவம், அடையாறு, பாலாறு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் படகு போக்குவரத்து இருந்த இந்த கால்வாய் தற்போது கழிவுநீர் செல்லும் ஓர் இடமாக இருந்து வருகிறது.

பக்கிம்காம் கால்வாய்

எனினும், இந்தக்கால்வாயை சீரமைக்கும் பணிகளை தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்தச்சூழலில் தான், பக்கிங்காம் கால்வாயில் அரை நூற்றாண்டிற்குப் பிறகு படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்க சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் முதற்கட்டமாக முட்டுக்காடு - நேப்பியர் பாலம் வரை 30 கி.மீட்டருகக்கு வாட்டர் மெட்ரோ அமைக்க பரிந்துரையை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கொடுத்திருந்த நிலையில், தற்போது  எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை, 53கி.மீ தூரத்துக்கு படகுபோக்குவரத்து (வாட்டர் மெட்ரோ) சேவை அமைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது டெண்டர் வெளியிட்டுள்ளது.