bike taxi file image
தமிழ்நாடு

சென்னை: “ஆட்டோ ஓட்டுநர்களால் பாதிக்கப்படுகிறோம்” - பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் காவல் ஆணையரகத்தில் புகார்

ஆட்டோ ஓட்டுநர்களால் தொடர்ந்து பைக் டாக்ஸி ஓட்டுனர்களுக்கு பாதிப்பு இருப்பதாக தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை முழுவதும் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் மூலம் 20-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனியார் பைக் டாக்ஸிகளை ஓட்டி வருகின்றனர், இதில், சென்னையில் மட்டும் 4500 பெண்கள் பைக் டாக்ஸிகளை ஓட்டி வருகின்றனர், இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பைக் டாக்ஸிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், “எங்களை அச்சுறுத்தும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்கள் பைக் டாக்ஸி ஓட்டுநர்களை தாக்குகின்றனர். பெண் பைக் டாக்ஸி ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் கூறுகின்றனர் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள்.

இதுதொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பைக் டாக்சி அசோசியன் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், “மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பைக் டாக்ஸி சேவை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வருவதால் தமிழகத்திலும் உரிய ஆவணங்களுடன் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து பணிபுரிய எந்த தடையும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், எங்களை பணிபுரிய விடாமல் சட்டத்துக்குப் புறம்பாக தொடர்ந்து சில ஆட்டோ ஓட்டுநர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். இம்மாதிரியான அச்சுறுத்தும் நடவடிக்கைகள் வாடிக்கையாளர்கள் பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்த முடியாத நிலையை உருவாவதோடு இதையே நம்பி இருக்கும் பைக் டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் புகார்

அச்சுறுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.