தமிழ்நாடு

சென்னையில் பதற வைக்கும் பைக் ரேஸ்: 17 பைக்குகளுடன் சிக்கிய 20 வாலிபர்கள்

சென்னையில் பதற வைக்கும் பைக் ரேஸ்: 17 பைக்குகளுடன் சிக்கிய 20 வாலிபர்கள்

webteam

சென்னையில் பைக்‌ ரேஸ் நடத்திய 20க்கும் மேற்பட்ட வாலிபர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். 

சென்னை அடையாறு பகுதியில் இருந்து கடற்கரை‌யை நோக்கி கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மின்னல் வேகத்தில் கடந்த சென்ற இருசக்கர வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் காயம் அடைந்த காவல் அதிகாரி சுதாரித்து பார்க்கும் போது இளைஞர்கள் பைக் ரேஸில் இடித்துவிட்டு நிற்காமல் செல்வதை கண்டுள்ளார். 

இதையடுத்து உடனடியாக விழிப்படைந்த காவல்துறையினர், இடித்த இளைஞர்கள் வேகமாக தப்பிச் சென்ற நிலையில் அவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த மற்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர்‌ அவர்களி‌ம் இருந்து 17 ரேஸ் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, அபிராமபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு‌ சென்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ ‌இடத்தில் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சுவாமிநாதன் நேரில் ஆய்வு ந‌டத்தினார்.