கலங்கி பேசிய இளையராஜா முகநூல்
தமிழ்நாடு

"13 நாடுகளில் சிம்ஃபனி' மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட இளையராஜா!

‘சிம்ஃபனி’ வெளியானதும் அதை நேரில் பார்த்தவர்கள் மெய்சிலிர்த்து நின்றனர். உலகங்கெங்கும் உள்ள தமிழர்கள் சமூக வலைதள பக்கங்களிலும் இளையராஜாவின் இசையே வைரலானது.

ஜெனிட்டா ரோஸ்லின்

லண்டன் மாநகரில் இசைஞானி இளையராஜா தனது சிம்ஃபனியை அரங்கேற்றினார். அப்பல்லோ அரங்கிற்குள் பொழிந்த கான மழையில், அங்கு அமர்ந்திருந்த ஏராளமானோர் நனைந்து மகிழ்ந்தனர்.

இதன்மூலம், மேற்கத்திய கிளாஸிக்கல் பாணி சிம்ஃபனியை லண்டனில் அரங்கேற்றிய முதல் ஆசிய நாட்டவர் என்ற முத்திரையையும் பதித்தார் இளையராஜா.

இதன்பின் சிம்ஃபனியின் மகத்துவத்தையும் விளக்கினார் அவர். வேலியன்ட் என்ற பெயரில் இளையராஜா வெளியிட்ட சிம்ஃபனி இசை வெளியீட்டு நிகழ்வை காண இங்கிலாந்திலிருந்தும் பிற நாடுகளில் இருந்தும் கூட இசை ஆர்வலர்கள் குவிந்திருந்தனர். அரங்கின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதும் பகிர்வதுமாக இருந்தனர்.

‘சிம்ஃபனி’ வெளியானதும் அதை நேரில் பார்த்தவர்கள் மெய்சிலிர்த்து நின்றனர். உலகங்கெங்கும் உள்ள தமிழர்கள் சமூக வலைதள பக்கங்களிலும் இளையராஜாவின் இசையே வைரலானது. இந்நிலையில், எப்போது அதிகாரபூர்வமாக முழு வடிவில் வெளியாகப்போகிறது என காத்திருக்கின்றனர் இசைரசிகர்கள்.

இந்நிலையில், லண்டனிலிருந்து சென்னை வந்தடைந்த இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், ” மிகவும் மகிழ்வான, மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழி அனுப்பி வைத்ததே, இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தார். இசை கலைஞர்கள் 80 பேரும் ஒருங்கிணைந்து சிம்ஃபனியை இசைத்தனர்.

ஆரம்பம் முதலே சிம்ஃபனியை ரசித்து ரசிகர்கள் கைத்தட்டி பாராட்டுக்களி கொட்டிக்கொண்டே இருந்தனர். உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களால் பெரிய நிகழ்ச்சியாக சிம்ஃபானி அரங்கேற்றம் அமைந்தது. முதல்வர், அரசின் வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. 13 நாடுகளில் சிம்ஃபனியை அரங்கேற்ற உள்ளேன். சிம்ஃபனியை டவுன்லோடு செய்து கேட்க வேண்டாம்; நேரில் வந்து காண வேண்டும். முதல்வர், அரசின் வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. என்னை இசைக் கடவுள் என்கிறார்கல். ஆனால் நான் அந்த அளவுக்கு இல்லை. ” என்று தெரிவித்துள்ளார்.