தமிழ்நாடு

கண்களை கவரும் சுவர் ஓவியங்கள் - வண்ணமயமான சென்னை விமான நிலையம் 

கண்களை கவரும் சுவர் ஓவியங்கள் - வண்ணமயமான சென்னை விமான நிலையம் 

webteam

சென்னை விமானநிலைய சுற்றுச்சுவர் வண்ணமயமாக மாற்றத்தை அடைந்துள்ளது.

சென்னையின் மிக முக்கியமான அடையாளம் மீனம்பாக்கம் விமானநிலையம். சர்வதேச அளவில் மிக முக்கியமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்திய அளவில் மும்பை, டெல்லி ஆகிய இரண்டு விமான நிலையங்களை அடுத்ததாக இது கருதப்படுகிறது.

உள்நாட்டு விமான நிலையம், பன்னாட்டு விமானநிலையம் என இரு பிரிவுகளைக் கொண்டு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஒன்று, காமராசர் உள்நாட்டு முனையம். இரண்டாவது, ஏறக்குறைய அண்ணா பன்னாட்டு முனையமாகும். 1400 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் பரந்து விரிந்துள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன், கொழும்பு என பல நாடுகளுக்கு விமானங்கள் பயணிக்கின்றன. 

மீனம்பாக்கம் விமான நிலையம் பல அதிரடியான மாற்றங்களை அடைந்து வருகிறது. இந்த மாற்றங்களுக்குப் பிறகு சிலமுறை கண்ணாடிச் சுவர்கள் சரிந்து விழுந்து விபத்துக்கள் நடந்துள்ளன. சீன அதிபர் சென்னை வந்ததை அடுத்து ஓடுதளத்தில் இருந்து விஐபிகள் வெளியேறும் பகுதியில் புதியதாக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது.

அதனை அடுத்து மீனம்பாக்கம் விமானநிலைய சுற்றுச் சுவர்களில் இப்போது அழகழகான ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய விமான நிலைய சுவரை சுற்றி 447க்கு அதிகமான சுவர் ஓவியங்களை வரையும் பணி நிறைவை எட்டி உள்ளது. 

தமிழக கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில், தஞ்சை கோபுரம், சென்னைப் பல்கலைக்கழகம், நாட்டுப்புறக் கலைஞர்கள், திருவள்ளுவர், பாரதி என வகை வகையான 400 ஓவியங்கள் பார்வையாளர்களை கவரும்படி உள்ளன. இந்த ஓவியங்களால் சுற்றுபுறச் சுவர் மிகவும் தூய்மைகாக மிளிர ஆரம்பித்துள்ளன.