வேகமெடுத்த ஃபெஞ்சல் முகநூல்
தமிழ்நாடு

CYCLONE FENGAL| மூடப்பட்ட சென்னை விமான நிலையம் - அதிகரித்த செம்பரம்பாக்கம் ஏரியின் கொள் அளவு!

சென்னையின் பிரதான இடங்களில் தற்போதைய நிலை என்ன விரிவாக காணலாம்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தீவிரம் காட்டும் ஃபெஞ்சல்!கரையை கடப்பது எப்போது?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறாது' எனக் கடந்த வியாழன் அன்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், 'புயலாக மாறி கரையைக் கடக்கும்' என வெள்ளிக்கிழமை காலையில் அறிவிப்பு வெளியானது.இதனைத்தொடர்ந்து, இன்று பிற்பகல் (30ஆம் தேதி) காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..

ஆனால், இன்று மாலையில் கரையைக்கடக்கும் என்றும் மீண்டும் அறிவிப்பு வெளியானது..மற்றொரு புறம் சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இன்றிரவு - நாளை காலை வரையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ள சூழலில், மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்துவந்தநிலையில், தற்போது 13 கிமீ வேகம் என்று அதிகரித்துள்ளது.

இந்தசூழலில், சென்னையின் பிரதான இடங்களில் தற்போதைய நிலை என்ன விரிவாக காணலாம்.

மீட்கப்பட்ட இருளர் இன மக்கள்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் வாயலூரில் கனமழை பெய்து வருகிறது.இதனால், பாதிக்கப்பட்டு தவித்த இருளர் சமூக மக்களை புதிய தலைமுறை மீட்டது..

வாயலூரில் வெள்ளம் பாதித்த பகுதியில் சிறிய குடிசை வீட்டில் வசித்தவர்கள் இருளர் இனமக்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான குடிநீர், பிஸ்கட் வழங்கி, முகாமில் தங்கவைக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மூடல்!

சென்னை விமான நிலையம் பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பகல் 1 மணி வரை தொடரும் மழை! வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னையில் பகல் 1 மணிவரை தீவிர மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திலும் கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூடப்பட்ட சுரங்கப்பாதைகள்!

தொடர்ந்து வரும், மழைக்காரணமாக, சென்னையில் உள்ள 6 சுரங்கப்பாதைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் - வீலர், பழவந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர், அஜாக்ஸ் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரி!

 நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 385 கனஅடியாக இருந்த நீர் வரத்து இன்று 449 கனஅடியாக அதிகரித்துள்ளது.