Police station pt desk
தமிழ்நாடு

சென்னை | வெளிநாட்டில் வசிக்கும் தாய் தன்னை பார்க்க வராத விரக்தி - விமான பணிப்பெண் விபரீத முடிவு

வெளிநாட்டில் உள்ள தாய் தன்னை பார்க்க வராத விரக்தியில் விமான பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஷா வர்மா (24), இவர், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தோழிகளுடன் தங்கி சென்னையில் உள்ள தனியார் விமானத்தில் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அபிஷா வர்மாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததால் துபாயில் உள்ள அவரது தாய்க்கு தோழிகள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

Death

அப்போது புதிய அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்குச் சென்றுள்ளதாகவும், இதையடுத்து அங்கு சென்று பார்க்குமாறு கூறிய நிலையில், அவரது தோழிகள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அபிஷாவர்மா தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இறந்து கிடந்த அபிஷா வர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வெளிநாட்டில் உள்ள தாய் தன்னை பார்க்க வராததால் மன உளைச்சலில் புதிதாக சென்ற வீட்டில் அபிஷா வர்மா தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் இந்த தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள தாய் தன்னை பார்க்க வராததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.