மக்கள் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க வசதியாக தனது வாட்ஸ் அப் எண்ணை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் பகிர்ந்துள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல்துறை துணை ஆணையர் விக்ரமன், அடையாறு காவல் மாவட்டத்திற்குகீழ் செயல்படும் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் காவல்துறை துணை ஆணையரை நேரடியாக அணுகுவதற்கு 87544 01111 என்ற மொபைல் எண்ணை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்திலும் அதை பகிர்ந்துள்ளார்.
இந்த மொபைல் எண்ணில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளார். புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். விக்ரமன் கொரோனா தடுப்பு பணியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.