செய்தியாளர்: பால வெற்றிவேல்
இயக்குநர் கே.பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமா துறையில் ஹுசைனி நடிகராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் கார்த்திக், உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளர். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள், மற்றும் திரைத்துறையினர் அஞ்சலிக்காக சென்னை பெசன்ட் நகரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.