செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை பார்க் டவுன் வால்டாக்ஸ் சாலையில் தங்க பட்டறை நடத்தி வருபவர் ஆதார் அலி. இங்கு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இந்த தங்க பட்டறையில் வேலை செய்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சைபுல் பியடா என்பவர் 1.466 கிலோ தங்கக் கட்டிகளை திருடிக் கொண்டு ஓடி விட்டார்.
இதனை சிசிடிவியில் பார்த்த உரிமையாளர் ஆதார் அலி, உடனடியாக யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் தங்கக் கட்டிகளை திருடிக் கொண்டு ஓடியவரின் செல்போன் எண்ணை வைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.