பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை மீது டிராக்டர் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.
சென்னை போரூர் அடுத்த அய்யப்பன் தாங்கல், ராமதாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், ஆதவ் இந்திய கடலோர கப்பல் படையில் துணை கமாண்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது 2 வயது மகள் ஆதிராவை அவரது தாத்தா, பாட்டி இருவரும் சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் மெயின்ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டிருந்த சிறுமி ஆதிரா தவறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஆதிரா மீது மோதியதில் அவர் மயங்கினார். இதையடுத்து பதறிப்போன தாத்தா பாட்டி இருவரும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் சிறுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆதிரா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தவவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆதிரா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.