செல்போனில் மூழ்கியபடியே இருப்பதாக தாய் திட்டியதால் ஆத்திரமடைந்த மகள், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை குரோம்பேட்டையை அடுத்துள்ள சானிடோரியம், சித்தி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது மகள் அபிராமி (18). இவர் 12ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் எப்போதும் செல்போனில் மூழ்கியபடியே இருந்தஅவரை அவரது தாய் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி குளியலறையில் சென்று மண்ணெண்ணை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.