செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி 4 வது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் (60). இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.. இவரது வீட்டில் பூவிழி ஸ்டெல்லா, வனஜா, கீதா, சாவித்திரி என நான்கு பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பத்மநாபன் தனது தாயாருடைய 41 சவரன் தங்க நகையை பீரோவில் வைத்திருந்தார்.. இதையடுத்து நேற்று பத்மநாபன் பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது அதில் வைத்திருந்த 41 சவரன் நகையில் 35 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன் இது குறித்து வீட்டில் வேலை செய்து வரும் ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது பூவிழி மற்றும் அவரது கணவர் பாரதி ஆகிய இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சந்தேகமடைந்த பத்மநாபன், கணவன் மனைவி இருவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.