போலீசார் விசாரணை pt desk
தமிழ்நாடு

சென்னை | CRPF வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை - போலீசார் விசாரணை

ஆவடி அருகே பட்டாபிராமில் CRPF வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் CRPF ல் சித்தூர் மாவட்டத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமராவதி தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று மதியம் பாடியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை தங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது இரண்டு பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக பட்டாபிராம் போலீசில் புகார் அளித்தனர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டாபிராம் குற்றப்பிரிவு போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து மோப்ப நாய் டாபி சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.