தமிழ்நாடு

ஆசிரியர் தண்டனையால் உயிரிழந்த மாணவர்!

ஆசிரியர் தண்டனையால் உயிரிழந்த மாணவர்!

webteam

சென்னையில் ‘வாத்து நடை’ தண்டனையால் மாணவர் உயிரிழந்த புகாரில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் நரேந்தர். இவர் நேற்று பள்ளிக்கு தாமதமாக வந்ததால், உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து நடை தண்டனை கொடுத்துள்ளார். அப்போது நடக்க முடியாமல் மயங்கி விழுந்து மாணவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பள்ளி சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் மாணவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால், உடற்கல்வி ஆசிரியரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவரின் பெற்றோர் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியின் தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும், உடற்கல்வி ஆசிரியருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.