சென்னையில் நடைபெற்ற சாலை மறியலால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கைவிட வேண்டும் போலீசார் கேட்டுகொண்டனர். அதையேற்று பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே, சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் ஒரு பகுதியினர் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை கைவிட மறுத்தனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் நகரின் பல பகுதிகளில் சாலைமறியல் நடைபெற்றது. இதன் காரணமாக சென்னையில் வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, ராயபுரம், ஆர்.கே.நகர், பூவிருந்தவல்லி, ஈசிஆர், வடபழனி நூறடி சாலை வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.