தமிழ்நாடு

கட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு

கட்டிட சாரம் சரிந்து விழுந்து விபத்து - 35 பேர் சிக்கி தவிப்பு

rajakannan

சென்னை கந்தன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்டிடத்தின் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

கட்டிடப் பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இன்று கட்டிடத்தில் கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, பாரம் தாங்காமல் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்துள்ளது. அப்போது, கட்டிடத்தின் மேலே போடப்பட்ட கான்கிரீட் மற்றும் இரும்புப் பொருட்களும் கீழே விழுந்தன.

இதில், சாரம் சரிந்து விழுந்த போது அதில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கியது. 10 ஆம்புலன்ஸ் மற்றும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீட்கப்பட்ட 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.