தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு

webteam

சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் நள்ளிரவில் சீரமைக்கப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள டிஎம்எஸ் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நேற்று மாலை சிறிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், பள்ளத்தின் உள்ளே மிகப்பெரிய அளவிலான வெற்றிடம் ஏற்பட்டது. இதையடுத்து விபத்து நேராமல் தடுக்க, பள்ளத்தைச் சுற்றி தடுப்புகளை போலீஸார் வைத்தனர். அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதற்கிடையில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் பள்ளத்தை சில மணி நேர முயற்சிக்கு பின் சரி செய்தனர்.

பள்ளம் விழுந்த இடத்தை ஆய்வு செய்த மெட்ரோ ரயில் உயரதிகாரிகள், அப்பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டதாகவும் அதனால், பள்ளம் ஏற்பட மெட்ரோ பணி காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், ஆய்வுக்குப் பிறகே பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.