தமிழ்நாடு

சென்னை : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் மரணம்

சென்னை : தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் மரணம்

webteam

சென்னையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே உறவினர் லட்சுமணன் என்பவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகின்றார். கட்டப்படும் வீட்டின் முன்பு செல்வராஜின் குழந்தை சந்தோஷ் குமார் (6) தனது சகோதரிகளுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ் நீர் தேக்க தொட்டியில் தவறி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் சத்தம்போடவே 14 அடி ஆழமுள்ள தொட்டியில் இறங்கி குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சென்று பரிசோதித்தபோது குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.