தமிழ்நாடு

செஞ்சி: மீன்பிடிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

செஞ்சி: மீன்பிடிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

kaleelrahman

செஞ்சி அருகே இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த சோழங்குணம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் மோகனராமன் (10), வெங்கடேஷ் என்பவரின் மகன் தாஸ் (7). இணைபிரியாத தோழர்களான இருவரும் சோழங்குணம் கிராமத்தில் அமைந்துள்ள எரியில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையறியாத பெற்றோர் சிறுவர்களை காணவில்லை என பல பகுதிகளில் தேடிப்பார்த்துள்ளனர். அவர்கள் எங்கும் இல்லாததால் தொடர்ந்து ஏரி பகுதியில் தேடி பார்த்துள்ளனர். அப்போது, சிறுவர்களின் சடலம் ஏரியில் மிதந்துள்ளது. இதைக் கண்ட பெற்றோரும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுவர்களின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வளத்தி காவல் துறையினர் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுவர்களின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சோழக்குணம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.