செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரும் கூடுவாஞ்சேரி காந்திநகர் முதல் தெருவில் தவெக கட்சி நிர்வாகி ஒருவர் சுவற்றில் விஜயின் படத்தை வரைந்து விளம்பர செய்துள்ளார்.
இந்நிலையில், பெண் ஒருவர் தனது முகம் முழுவதையும் துணியால் மூடி மறைத்தபடி சுவற்றில் வரையப்பட்டிருந்த விஜயின் படத்தின் மீது கருப்பு மை பூசி சேதப்படுத்தி உள்ளார்
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் இதுகுறித்த சிசிடிவி காட்சிகளுடன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், விஜயின் படத்தின் மீது கருப்பு மை பூசி சேதப்படுத்திய பெண்ணின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.