செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அருகே உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து, தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் யுவராஜ் (40) என்பவர் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு, பஜார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது மின்கம்பிகள், லாரியில் இருந்த வைக்கோல் மீது உரசியதால் தீப்பற்றி ஏறியத்துவங்கியது.
இதை அறிந்த லாரி டிரைவர், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார், ஆனால், அணைக்க முடியாததால் லாரி தீப்பற்றுவதை தடுக்க அருகே இருந்தவர்களிடம் அருகே ஏரி எங்கே உள்ளது என கேட்டறிந்து, அருகே இருந்த கடுகுப்பட்டு ஏரியில் லாரியை இறக்கியுள்ளார். இந்நிலையில், லாரி டிரைவரின் சாதூரியத்தால் பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.