காரில் இருந்த சடலமாக மீட்கப்பட்ட மத போதகர் pt desk
தமிழ்நாடு

செங்கல்பட்டு | கேட்பாரற்று நின்றிருந்த காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மத போதகர்!

மதுராந்தகம் அருகே கேட்பாரற்று நின்று கொண்டிருந்த காரில் கிறிஸ்தவ மத போதகர் சடலம் கண்டெடுக்கப்பட்ட நம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை எதிரே உள்ள காலி இடத்தில் கேட்பாரற்ற நிலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையில், ஒருவர் சடலமாக இருந்து உள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில், இவர் அகிலி கிராமத்தைச் சேர்ந்த அமுல்ராஜ் என்பதும், உத்தமநல்லூர் கிராமத்தில் கிறிஸ்துவ ஆலயத்தில் ஆயராக பணி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது

மேலும் கைரேகை நிபுணர்களை வரவைத்து இவர் தானாக இருந்தாரா, அல்லது இவரை யாரேனும் கொலை செய்துள்ளார்களா என பல்வேறு கோணத்தில் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.