தமிழ்நாடு

செங்கல்பட்டு: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழப்பு - அரசு மருத்துவர்கள் போராட்டம்!

செங்கல்பட்டு: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 பேர் உயிரிழப்பு - அரசு மருத்துவர்கள் போராட்டம்!

webteam

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்த்து நோயாளிகளுக்கு தேவயான ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திட வேண்டும் என்று கூறி அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு ஆக்சிஜசன் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து 13 நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக முறையாக எங்களால் நோயாளிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தர முடியவில்லை என்றும் ஆகையால் உடனடியாக ஆக்சிஜன் வழங்குவதற்தான ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் முழக்கமிட்டு அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும் இந்த நிலையில் வேறு மாவட்டத்திற்கு மருத்துவர்களை மாற்றுவது மிகவும் அபாயகரமானது என்றும் கூறினர். இந்தப்போராட்டத்தில் ஏராளமான இளம் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்