துப்பாக்கி சுடும் பயிற்சி மையம்
துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் pt wep
தமிழ்நாடு

தாம்பரம்: ’ஏர் கண்’ வெடித்து சிறுவனின் தோள்பட்டையில் பாய்ந்த அலுமினிய குண்டுகள் - நடந்தது என்ன?

PT WEB

தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் பகுதியில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான சிறுவர் மற்றும் சிறுமியர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல் துப்பாக்கி சுடும் பயிற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார்ப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் சித்தார்த் என்ற 13 வயதுடைய மாணவன் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், சிறுவன் துப்பாக்கி சுடும் பயிற்சி செய்த திடீரென எதிர்பாராத விதமாக "ஏர் கண் வெடித்து அலுமினிய குண்டு தோள்பட்டையில் பாய்ந்துள்ளது. குண்டு உடலில் பாய்ந்ததும் சிறுவன் சித்தார்த் கதறித் துடித்துள்ளான். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை சதீஸ் பாபு உடனடியாக சிறுவனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் தோள்பட்டையில் ஏர் கண் குண்டு வெடித்ததால் தோள்படையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை வேண்டும் எனக் கூறியுள்ளனர். அறுவைச் சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், தனியார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.