தமிழ்நாடு

திருப்பூரை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

திருப்பூரை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

Sinekadhara

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்கள அச்சுறுத்திய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. 7 பேரை தாக்கிவிட்டு போக்குகாட்டி வந்த இந்த சிறுத்தைக்கு இன்று மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஊசி செலுத்தியவுடன் அருகிலிருந்த இரு சுவர்களுக்கு இடையேயான குறுகிய இடத்தில் சிறுத்தை புகுந்துகொண்டது. இதனால் அதனை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் முற்படவில்லை. ஏனெனில் முதல் மயக்க ஊசி செலுத்திய 10லிருந்து 30 நிமிடத்திற்குள் சிறுத்தை மயக்கநிலைக்கு சென்றுவிடும் என்று கூறியிருந்தனர். அதன்படி, எந்த இடத்தில் ஊசி செலுத்தினரோ அதே இடத்தில் சென்று பார்த்தபோது அதே இடத்தில் சிறுத்தை மயங்கி கிடந்தது.

மயக்கி இருந்த சிறுத்தையை வலைவிரித்து வனத்துறையினர் பிடித்தனர். அதனை கூண்டு வைத்திருந்த வண்டியில் ஏற்றி கொண்டுசென்றனர். உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்தபிறகே சிறுத்தையை எங்கு கொண்டுசெல்லலாம் என்பதுகுறித்த முடிவெடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.