நெல்லையில் இரண்டு மாதங்களாக மக்களை அச்சுறுத்திவந்த 2 வயது பெண் சிறுத்தை பிடிபட்டது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு பகுதியின் அருகாமையில் உள்ள அண்ணா நகரில் 2 மாதங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்திருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் தொடர்கண்காணிப்பில் ஈடுபட்டதோடு, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் உள்ள ஆட்டை உண்பதற்காக வந்த பெண் சிறுத்தை சிக்கியது. இந்த தகவலை அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். இதன் அடிப்படையில், வனச்சரகர் தலைமையிலான குழு சிறுத்தையை மீட்டு முதலுதவி அளித்து அடர் வனப்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு கரடி ஒன்று திரிவதை கண்டதாகவும், அதனையும் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.