தமிழ்நாடு

கொரோனாவால் இறந்த முதியவர் - வீட்டிலே கிடந்த உடலை அடக்கம் செய்த தொண்டு நிறுவனத்தினர்

கொரோனாவால் இறந்த முதியவர் - வீட்டிலே கிடந்த உடலை அடக்கம் செய்த தொண்டு நிறுவனத்தினர்

kaleelrahman

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கொரோனா நோயால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முன்வராத உறவினர்கள். வீட்டிலே கிடந்த உடலை விடியல் தொண்டு நிறுவனத்தினர் அடக்கம் செய்தனர்.

தமிழகத்தில் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழக கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள தாளவாடியை அடுத்த பசுப்பன் தொட்டி கிராமத்தில் கொரோனா தொற்று பரவியது. இதில், அதே ஊரைச் சேர்ந்த 65 வயது முதியவர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் கிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவர், இரு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு திங்கட்கிழமை நள்ளிரவில் உயிரிழந்துள்ளார். அவரது மகன், மருமகள் ஆகியோர் அதே கிராமத்தில் வசித்த வந்த நிலையில், கொரோனா தொற்று காரணாக தந்தையின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை.

இதனால், முதியவரின் உடல் வீட்டிலேயே கிடந்தது. இதையறிந்த தாளவாடி விடியல் தொண்டு நிறுவனத்தினர் 5 பேர் முதியவரின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனர். அவர்கள் முதியவரின் விவசாயத்தோட்டத்தில் உள்ள காலி இடத்தில் ஜேசிபி உதவியுடன் குழி தோண்டி கிருமி நாசினி தெளித்து நல்லடக்கம் செய்தனர். இச் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.