விஜய் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

பெரம்பலூரில் பரப்புரை ரத்து.. தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்?

தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்தில் இனி மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்தில் இனி மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை தவெக எனும் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், மக்களிடம் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில், அக்கட்சியின் 2வது மாநாட்டிற்குப் பிறகு கடந்த 13ஆம் தேதி திருச்சியில் முதல்முறையாக தனது பரப்புரையைத் தொடங்கினார். அவரது வருகையினால், திருச்சி நகரமே ஸ்தம்பித்தது. இதனால், குறித்த நேரத்தில்கூட அவரால் பரப்புரையைத் தொடங்க முடியவில்லை. தவிர, அன்றைய தினம் பெரம்பலூரிலும் அவரால் பரப்புரையைத் தொடர முடியாமல் ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்னதாக, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் தனது பரப்புரையைத் தொடங்குவதாகத் தெரிவித்து, அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டிருந்தன.

விஜய்

அவர் வாரத்தில் ஒருநாள் மட்டும் பரப்புரையைத் தொடங்கியதாலும், அவரைக் காண கூட்டம் கூடியதாலுமே திருச்சியில் மக்கள் குவிய ஆரம்பித்தனர். இதன் காரணமாக, தற்போது விஜயின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சனிக்கிழமைதோறும் 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், இனி 2 மாவட்டங்களுக்கு மட்டுமே செல்வார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், செப்டம்பர் 20ஆம் தேதி, திருவாரூர் மற்றும் நாகைக்கு மட்டுமே விஜய் செல்வார் என தெரிகிறது. கடந்த சனிக்கிழமை 3 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த விஜய், திருச்சி மற்றும் அரியலூரில் மட்டுமே பரப்புரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.