திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நாளை மறுதினம் சந்திக்க உள்ளார்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த 1-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூட்டணி அறிவிப்பை வெளியிட்டனர்.
மேலும் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். இதன்படி நாளை மறுதினம் சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்திக்க இருக்கிறார். நாடே உற்றுநோக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் என கூறப்படுகிறது.