தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

webteam

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.