தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

jagadeesh

மாலத்தீவு மற்றும் லட்சத்தீவை ஒட்டியுள்ள குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மாலத்தீவு, லட்சத்தீவு ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மேற்கு மற்றும் அரபிக் கடல் ‌பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.