தமிழ்நாடு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !

webteam

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் எஞ்சிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.