தமிழ்நாடு

`தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு!’- வானிலை ஆய்வு மையம் தகவல்

நிவேதா ஜெகராஜா

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/PvIKbt2VoMQ" title="எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.